கம்பம்;                                                                                                                                                                                   தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு குறித்து தீக்கதிரில் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவந்துள்ள கட்டுரையைப் பார்த்து விட்டு ஒரு தோழர் கேட்டார். கடந்த மாநாடு எப்போது நடந்தது என்று! 28வது மாநாடு 2012 டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்றது என்றேன். சிறிது நேரம் யோசித்து விட்டு, அப்போது இந்த நாலே முக்கால் வருஷத்தில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்டார். இதுபோல் பலருக்கும் இந்த கேள்வி எழலாம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 28வது மாநில மாநாடு நடைபெற்ற 2012ஆம் வருடம் தமிழகம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. கிராமப்புற மக்களின் வாழ்வ தாரம் அற்றுப்போய் மீளமுடியாத துயரத்தில் தள்ளப்பட்டு இருந்தனர்.

மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள் அனைவருமே வறட்சி நிவாரணம் கேட்டு வலுவான போராட்டத்திற்கு செல்ல வேண்டுமென்று கூறினார்கள். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா இரண்டு சாகுபடிகளும் அந்த ஆண்டு இல்லாமல் போய் விட்டது. எனவே, அரசு நிவாரணம் வழங்காமல் விவசாயிகளால் மீள முடியாது என்ற நிலை.

ஆட்சியரகங்களை ஸ்தம்பிக்க வைத்த தொடர் முற்றுகை
இத்தகைய நிலையில் தான் 2013 ஜனவரி, 7ஆம் தேதி முதல் தஞ்சை, நாகை,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக “தொடர் முற்றுகை” போராட்டத்தில் ஈடுபடுவதென்று 2012 டிசம்பர் 24ஆம் தேதி அறிவித்தோம்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்துடன் சேர்ந்து இந்தப்போராட்டம் நடத்தப்பட்டது. பல்லாயி ரக்கணக்கான விவசாயிகளும் – விவசாயத் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் மூன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்வாயிற் கதவுகள் பூட்டப்பட்டே இருந்தன.

மாவட்ட ஆட்சியர்களும், அலுவலர்களும் பின் வாசல் வழியாகத்தான் அலுவலகத்திற்குள் சென்று வந்தனர். அப்போது ஊடகங்களில் ஒலிபரப்பான வீடி யோக்களை பார்த்தாலே அப்போராட்டத்தின் எழுச்சியை காண முடியும்.

இரவு – பகல் போராட்டம் தொடர்ந்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில், இரவிலே மழை, கடுங்குளிர் இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது. ஜனவரி 9ஆம் தேதி கொட
நாட்டில் நடைபெற்ற அரசு விழாவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, “டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அரசு ஈடு செய்யும்” என்று அறிவித்தார்.
அமைச்சர்களும் வறட்சி குறித்து ஆய்வு செய்ய டெல்டா மாவட்டத்திற்கு வருவதாக
அன்றே அறிவிக்கப்பட்டது. இந்த அறி விப்புக்குப் பிறகுதான் தொடர் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழகம் எத்தனையோ வறட்சிகளை சந்தித்திருக்கிறது. பஞ்சம் பிழைக்க மக்கள்
கிராமத்தைவிட்டு வெளியேறி சென்றி ருக்கிறார்கள். வறட்சியினால் ஏற்பட்ட வறுமை
தாள முடியாமல் எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அப்போதெல் லாம் வறட்சி நிவாரணம் வழங்கப்படவே இல்லை. மேற்கண்ட போராட்டத்தைத் தொடர்ந்து வறட்சி குறித்து ஆய்வுசெய்து 2013 பிப்ரவரி 8 ஆம் தேதி முதலமைச்சர் வறட்சி
நிவாரணம் குறித்த அறிவிப்பை தமிழக சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

ரூ.1376.50 கோடி வறட்சி நிவாரணமாக அறிவிக்கப் பட்டது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக வறட்சிக்கென்று நிவாரணம் பெற்றுத்தந்தது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.

2016ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்ட போது 2016 டிசம்பர் 28ஆம் தேதி மாநிலம் முழுவதும் வறட்சி நிவாரணம் கோரி தொடர் முற்றுகை போராட்டத்தைத் துவக்கினோம். அமைச்சர்
கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையொட்டி அன்று இரவு 8 மணிக்கு போராட்டம் முடிக்கப்
பட்டது. டிசம்பர் 30ஆம் தேதி நான்கு அமைச்சர் கள் கொண்ட குழுவுடன் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் விரிவான மனுவினை அளித்துப் பேசினோம்

பொங்கலுக்கு முன்பாக வறட்சி நிவார ணம் குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்
சர்கள் உறுதியளித்தனர். 2017 ஜனவரி 10ஆம் தேதி தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

வறட்சியின் காரணமாக தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மாண்டு போன விவ
சாயிகளின் குடும்பங்களில் 82 குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்
பட்டுள்ளது. வழங்கிய தொகை போதாது என்றாலும்,இந்த வறட்சி நிவாரணத்தை பெற்றுத்தந்ததில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இடைவிடாத, சுயேட்சையான மற்றும்
கூட்டாக நடத்திய போராட்டங்களின் விளைவு என்பதையாராலும் மறுக்க முடியாது.

விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி
இது மட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தம், திருவாரூர் மாவட்டம் பூங்காவூர் கிராமம் மதியழகன், சித்தன்வாழூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன், தேனி மாவட்டம் உப்புகோட்டையைச் சேர்ந்த அழகுவேல், நாகை மாவட்டம் பெருமழை கிராமம் ராமலிங்கம் ஆகிய 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் 2016 ஜனவரி 10ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வழங்கியது.

அது மட்டுமல்லாமல், 2016-17 வறட்சியின் காரணமாக மாண்டு போன விவசாயிகளின் குழந்தைகள் 42 பேரின் கல்வியை உத்தரவாதப்படுத்தக் கூடிய வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முயற்சியெடுத்து ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் உதவியுடன், இந்த குழந்தைகளுக்கு எத்தகைய படிப்பை படித்தாலும் படித்து முடிக்கும் வரை கல்விக்
கட்டணத்தை வழங்குகிறோம் என்று

அறிவித்துள்ளோம். இந்தஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஜுலை 8ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் டாக்டர். வசந்தி தேவி அவர்கள் கலந்து கொண்டுவழங்கினார். ஆட்சியாளர்கள் கைவிட்டா லும் நாங்கள் இருக்கிறோம் உதவிட, நம்பிக்கையுடன் படியுங்கள் என்ற தன்னம்பிக்கையை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருப்பது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

மக்களின் துயரில் இரண்டறக் கலந்து…
2015ஆம் ஆண்டில் ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்த மழையால் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மீட்பு நடவடிக்கை களிலும், நிவாரணம் வழங்குவதிலும், அரசிடமிருந்து பெற்றுத்தரவும் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது தமிழ்நாடு விவசாயி
கள் சங்கம். குறிப்பாக, அப்போது சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் மாதக்கணக் காக சேற்றிலும், தண்ணீரிலும் கிடந்து செயல்பட்டதை கடலூர் மாவட்ட மக்கள் அறிவார்கள்.

இப்படி மக்களின் துயரத்தில் இரண்டறக் கலந்து அவர்களை துயரின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை இயல்பான ஒன்றாக ஆக்கிக் கொண்டிருப்பது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

காவிரிப் போராட்டங்கள்
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்திடக் கோரி, கர்நாடக மாநில அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து, மத்திய பாஜக அரசின் தமிழகத்திற்கு விரோதமான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து எண்ணிடலங்கா போராட்டங்களை தனியாகவும், மற்ற விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டாகவும் நடத்தி காவிரிப் பாசன உரிமையைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளோம்.

எரிவாயுக் குழாய்க்கு எதிராக
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராடி அத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக்
கூடாது என்று தமிழக அரசை அறிவிக்க வைத்ததில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பங்கினை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் கெயில்
நிறுவனத்திற்கு சாதகமாக இருந்த போதும் இன்று வரை குழாய் பதிக்கும் நடவடிக்கை யில் அந்நிறுவனம் ஈடுபடாமல் இருப்பதற்கு விவசாயிகளின் ஒன்றுபட்ட வீரியமிக்க போராட்டத்தின் காரணம் ஆகும்.

கோக் ஆலைக்கு எதிராக
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோகோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 71.34 ஏக்கர் நிலத்தை 98 வருடத்திற்கு ஏக்கருக்கு 1 ரூபாயும், 99ஆம்
ஆண்டிலிருந்து 100 சதவீதம் உயர்த்தி ஏக்கருக்கு 2 ரூபாயும் என்று வாடகை தீர்மானித்த அரசின் கயமைத்தனத்தை சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தி 2015 ஏப்ரல் 20ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்ய வைத்ததில் முக்கிய பங்காற்றியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் கண்ணன்கோட்டை. முழுக்க, நெல் விளையும் நஞ்சை நிலம். ஏரி அமைப்பதற்காக 807 ஏக்கர் நிலங்கள் முழுவதையும் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள்
இயந்திரங்களுடன் சென்று பயிரை அழித்தனர். விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை
அவர்களின் சம்மதமில்லாமல் கையகப் படுத்தும் அரசின் அடாவடித்தனத்திற்கெதிராக களத்தில் இறங்கியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொடர் போராட்டத்தின் விளைவாக விவசாயிகளின் நிலம் அவர்கள் கையில் இப்போது பாதுகாப்பாக உள்ளது என்றால் அதற்கு காரணம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

பசி நோக்கார்; கண் துஞ்சார்
மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி
வருவது. அனுபவ நிலத்திற்கு பட்டா, குடிமனைப்பட்டா கேட்டு தொடர் போராட்டங் களை நடத்தி லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா பெற்றுத்தந்தது, மத்தியஅரசின் விவசாயிகள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக இடைவிடாத பிரச்சாரம், போராட்டம் என்று களமாடுவது என பல்லா யிரக்கணக்கான ஊழியர்கள் “பசிநோக்கார், கண்துஞ்சார்” என்று தன்னலம் கருதாமல் போற்றத்தக்க வகையில் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். விவசாயிகள் சங்கத்தின்
பணிகளில் சிறுதுளி மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது.

10 லட்சம் உறுப்பினர்களுடன்…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அமைப்பு,
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர் களைக் கொண்ட மிகப்பெரிய விவசாயிகள் சங்கம் 1942இல் துவங்கப்பட்டு, கடந்த 75 ஆண்டுகாலமாக தமிழக கிராமப்புற மக்களின்
வாழ்வோடு பின்ணிப் பிணைந்து செயல்பட்டு வந்துள்ள சங்கம்.

இச்சங்கத்தின் சாதனைச் சரித்திரம் ஏடுகள் கொள்ளாது. இத்தகு பெருமைமிகு சங்கத்தின் 29வது மாநில மாநாடு ஆகஸ்ட் 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் கம்பத்தில் நடைபெறுகிறது. 29ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய உழவர் பேரணி சங்க வரலாற்றில் புதிய சாதனையாக அமையவேண்டும். அதற்கு தமிழகம் முழுவதி லிருந்து ஆயிரமாயிரமாய் கம்பம் நகருக்கு அணிதிரண்டு வாருங்கள். வரவேற்க காத்திருக்கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.