கோவை,

கோவை ஈச்சனாரி புறவழிச்சாலை அருகே இன்று அதிகாலை தென்காசியில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்து கொண்டு இருந்தது. அப்போது கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த லாரி மீது மோதி பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் தூங்கிக்கொண்டு வந்த பயணிகள் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் அவ்வழியே மற்ற வாகனங்களில் வந்தவர்கள் சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் பேருந்திற்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டதோடு, பேருந்தினை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினர் . இந்த விபத்தில் ஓட்டுனர்  மாரியப்பன் , ஜமீலா ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.  மாணிக்கம் , மணிமேகலை, வத்சலா, பாலகுரு ,பொன்னுச்சாமி உள்பட 9 பேர்  லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply