சண்டிகர்,

ராம் ரஹிம் சிங் ஆதரவாளர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்களை பறிமுதல் செய்ததாக அரியானா காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் வெள்ளியன்று காலை சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத்திலிருந்து பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு புல்லட் புரூப் வாகனத்தில் சென்றார். அப்போது அவரது வாகனத்துடன் 100 மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப், அரியானா, தில்லி மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ராம் ரஹிம் சிங் ஆதரவாளர்கள் வாகனங்கள் , அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்  ராம் ரஹிம் சிங் வாகனத்துடன் அணிவகுத்து சென்ற வாகனத்தில் இருந்த ஆதரவாளர்களிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி உட்பட 6 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அரியானா காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply