ஜம்மு;
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, ஹரியானா அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மிளகாய் குண்டுகள்? மிளகு கையெறி குண்டுகள்? இவை அனைத்தையும் பாதுகாப்புப் படைகள், போராடும் காஷ்மீரிகளைத் தடுக்க மட்டும்தான் பயன்படுத்துமா?’ என கேள்விகள் எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்ப பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய ‘‘மனிதகேடயம்’’ முறையையும் குறிப்பிட்டு அவர் விமர்சனம் செய்துள்ளார்.

‘’பஞ்ச்குலாவில் மனித கேடயம் பயன்படுத்தாதது ஏன்? பல்வேறு ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தமுறை காஷ்மீரில் மட்டும் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டதே?’’ என எள்ளலுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கலவரத்திற்கு காரணமான முதலமைச்சர் கட்டாரை, பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உமர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: