சண்டிகர்,
பாலியல் பலாத்கார வழக்கில் சீக்கிய சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால்  அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஐ தாண்டி உள்ளது.  350 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் அங்கு பதட்டமான நிலையே பெரும்பாலான பகுதிகளில் நீடிக்கிறது.
குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு கூறியதும். அவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து  குற்றவாளி ராம் ரஹீமை, போலீசார் கைது செய்து ஹெலிகாப்டர் மூலம் ரோதக் அழைத்து சென்றனர்.

அவருடன் ஏராளமான பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது நீதிமன்ற வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோதக்கில் சொகுசு விடுதி ஒன்றிற்கு ராம் ரஹீம் அழைத்து செல்லப்பட்டு, ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாலை சிறையில் அடைத்தனர். அங்கு மினரல் வாட்டர் வசதியுடன் உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply