சண்டிகர்,
பாலியல் குற்றவாளி என்று பஞ்ச்குலா நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து விஐபி கைதி அந்தஸ்து வழங்கி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்க்கு  பாஜக பரிகாரம் செய்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த  தேர்தலில் சாமியார் குல்மீத் ராம் ரஹீம் சிங் பாஜவின் வெற்றிக்கு ஓயாமல் உழைத்தவர். இன்றைய அரியானா ஆட்சியிலும் அவரது தயவு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  பிரதமர் மோடியே சாமியாரின் செயல்பாடுகளை புகழ்ந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பஞ்ச்குலா நீதிமன்றம் சாமியார் குல்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பஞ்சாப், அரியானா, டில்லி மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் 32 பேர் உயிரழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ‘‘கைது செய்யப்பட்ட சாமியார் அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனரியா சிறை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்’’ என சிறைத் துறை அமைச்சர் கிருஷ்ணன் லால் பன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த விருந்தினர் மாளிகை சிறை வளாகத்தில் அமைந்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த மாளிகை சிறையாக செயல்படும். அவருக்கு சிறையில் விஐபி கைதி அந்தஸ்து வழங்கப்படும்’’ என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.