வட இந்திய சாமியார் ராம் ரஹீம் வழக்கு சிபிஐ, முஞ்சா நாராயணன் டிஐஜி ஆக இருந்தார் 2002 ல், இவரிடம் இந்தச் சாமியார் வழக்கு ஒப்படைக்கப்பட்டது (இவர் இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டார் , இவர் வயது 69 )
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள் டிசம்பர் 12 , 2002. இதற்கிடையே சில நாட்களில் இந்த வழக்கு குறித்து புலன்விசாரணை செய்து, இதனை வெளி உலகிற்கு கொண்டுவந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற நிருபர் சாமியாரின் பக்தர்களால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.

ஒரு நாள் திடு திப்பென்று சிபிஐ உயர் அதிகாரி இவரிடம் வந்து ” இந்த வழக்கை முடித்து விடுங்கள் , நடவடிக்கை ஒன்றும் எடுக்காதீர்கள்” என்றார். ஆனால் நாராயணன் விசாரணையைத் துவக்கினார். அரசியல்வாதிகள், உயர் அரசு அதிகாரிகள் குறுக்கீடு பல. ஆனால் நீதிமன்றம் இவருக்கு உறுதுணையாக இருந்ததால் விசாரணையைத் தொடர முடிந்தது என்கிறார் இவர்.

1999 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்காளக்கப் பட்ட இளைஞி அந்த மடத்தை விட்டு அகன்றார். அவருக்கு திருமணமும் நடந்தது. அந்த பெண்ணிடம் மற்றும் அவர்களின் உறவினரிடம் பேசி அதன் பின்பு தான் வாக்குமூலம் பெற முடிந்தது.

இந்த வாக்கு மூலம் மஜிஸ்திரேட்டின் முன்பு பெறப்பட்டது , காரணம் இவர் தனது வாக்குமூலத்தை பின் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தில் சாமியார் குர்மீத்திடமும் இவர் விசாரணை செய்தார். விசாரணையின் போது குர்மீத் அச்சங்கொண்டவராக இருந்தார் , நேரடி பதிலைத் தவிர்த்தார்.

இந்த வழக்கு எவ்வாறு துவங்கப்பட்டது ? ஒரு தபால் அட்டை, உயர்நீதிமன்றத்திற்கு வந்தது.

மொட்டைக்கடிதம். ‘இரு பக்தைகள் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப் படுகின்றனர்’ என்று. உயர்நீதிமன்றம் சி பி ஐக்கு ஆணையிட்டது. இந்த வழக்கை முடிக்க பதினைந்து ஆண்டுகள் (என்ன வேகம்). 2014 பொதுத்தேர்தலில் பாஜக ஆட்சிக்கு இந்த சாமியார் பிரச்சாரம் செய்கிறார். இதற்கிடையே அரியானா மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வருகிறது. மாநில அரசின் கலாச்சார தூதுவர் ஆகிறார். மாநிலத்தின் மூன்று அமைச்சர்கள் அடிக்கடி இவரது ஆசிரமத்திற்கு போய்வருகிறார்கள். கோடிக்கணக்கான ரூ நன்கொடையாக கை மாறுகிறது.

பல இடையூறுகள் அழுத்தத்தைத் தாண்டி நேற்று நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது. தண்டனையின் விவரம் வரும் 28 ந்தேதி அறிவிக்கப்படும். இதற்கிடையே நீதிமன்ற காவலில் இருக்க வேண்டிய ரேப் குற்றவாளி இன்று விஜபி யாக விருந்தினர் மாளிகை யில்.

பாஜக MP சாக்க்ஷி மகாராஜ் சொல்கிறார், Only Dera is not responsible for violence. Even the court is also responsible for the violence.

பாரத் ஆத்தா கி ஜெய் !

Gurmeet Ram Rahim convicted: Dera chief offered VIP treatment, to stay at guest house in Rohtak jail

  • Kalaiarasu R

Leave A Reply

%d bloggers like this: