தில்லி,

பண மோசடி வழக்கில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி-யை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் மொயின் குரேஷி வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்து வருகிறார். அந்நிய செலவாணி மோசடி, வருமான வரி ஏய்ப்பு, சட்டத்துக்கு புறம்பான பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காக அவர் மீது 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி வெள்ளியன்று நள்ளிரவு குரேஷி-யை தில்லியில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மொயின் குரேஷி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave A Reply