சண்டிகர்,
பஞ்சாப்,அரியானா மற்றும் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. 3 ஊடக வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தின்போது 32 பேர் உயிரிழந்தனர். மேலும்  250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரியானா கலவரம் எதிரொலி காரணமாக டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியில் 11 மாவட்டங்களிலும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கலவரம் தொடர்பாக அரியானா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போது குர்மீத் ராம் ரகீம் சிங்கின் சொத்துகளை முடக்கி கலவரம் சேதம் மதிப்பினை ஈடுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இன்று காலை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தில்லியிலுருந்து அரியானா செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கலவரம் தொடர்பாக ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது.இதனிடையே கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளது

Leave A Reply