புதுதில்லி,
தில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த தில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் இந்த கல்வியாண்டில் டெல்லியில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அரசுக்கு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் கட்டணத்தை உடனடியாக பெற்றோரிடம் திரும்ப கொடுக்க வேண்டும்.

இதற்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அரசு பள்ளி நிர்வாகத்தை கையகப்படுத்தும் என முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் சுமார் 70 பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை உயர் நீதி மன்றத்தில் செலுத்தியுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தில்லியில் உள்ள 449 பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக நீதிபதி அனில் தேவ் தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியிருந்தது.இந்த பரிந்துரையின் பேரிலேயே கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகளை தில்லி அரசு கைப்பற்றும் என முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply