புதுதில்லி,
ஆதார் வழக்கில் தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மஹாராஷ்டிர அரசின் உத்தரவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்க்கும் வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று மற்றவர்கள் நம்முடைய விருப்பத்தில் தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை என சுட்டிக் காட்டினர். அதனால், இந்த வழக்குக்கும் தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply