வாஷிங்டன்;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மீதான அதிருப்தி காரணமாக, அவரது ஆலோசகர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகரும், தேசிய பாதுகாப்பு உதவியாளருமான செபாஸ்டியன் கோர்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செபாஸ்டியன் கோர்கா தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிபர் டிரம்புக்கு பல ஆலோசனைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: