சென்னை,

கந்துவட்டி புகாரில் கைதாகியுள்ள சுகன் போத்ராவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா மற்றும் அவரது 2 மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகிய 3 பேர் மீதும் கந்துவட்டி   தடுப்புச்சட்டம்(2003)  உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து தொடர்ந்து போத்ரா மீது கந்துவட்டி புகார் வந்ததை அடுத்து அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் போத்ராவின் மகன் சுகன் போத்ராவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: