பஞ்ச்குலா;                                                                                                                                                                                வன்முறைச் சம்பவம், தொடர் பதற்றம், ஊரடங்கு உத்தரவுக்கு இடையே, சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்-கிற்கான தண்டனை விவரத்தை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்களன்று அறிவிக்கிறது.

பெண் சிஷ்யைகள் 2 பேரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், ஐபிசி பிரிவு 376 (வல்லுறவு) மற்றும் 506 (குற்றவியல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என மீது சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

எனவே, இந்தப் பிரிவுகளின் கீழ், குர்மீத் ராமிற்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படாலம் என கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.