காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 316 பேர் பலியாகினர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 201 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 23 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் 2367 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 316 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக குஜராத்தில் முகாமிட்டுள்ள மத்திய குழு, மாநில அரசு மேற்கொண்டு வரும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: