காஞ்சிபுரம்,

திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றவர்களை   தட்டிக்கேட்ட தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கபப்ட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நெல்லூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களது பகுதியில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனத்தில் குடியிருப்பு பகுதியில் அதி வேகமாகச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய தலித் மக்கள் சிலர், குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் இருப்பதால் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தடுத்து நிறுத்தியவர்களை தரக்குறைவாக பேசினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட இளைஞர்கள் தங்கள் பகுதிக்கு சென்று, ஆதரவாளர்களை அழைத்துக் வந்து தலித் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தொலைக்காட்சி பெட்டிகளையும் , இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். பின்னர் தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: