மண்ணை வாரித்தூற்றுவோம்

தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் நெ.து.சுந்தரவடிவேலுக்குப் பிறகு பள்ளிக்குழந்தைகள் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு செயலராகப் பொறுபேற்றவர் திரு.த.உதயச்சந்திரன்.

அவர் பொறுப்பேற்ற நாள் முதலாக பள்ளிக்கல்வித் துறையில் அதிசயமான மாற்றங்கள் நாளும் நடந்துகொண்டிருக்கின்றன.வசூல் மையங்களாகத் திகழ்ந்து கொண்டிருந்த பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் எல்லாம் கல்விப்பணி ஆற்றத்துவங்கியிருந்தன.வெளிக்காற்று வகுப்பறைக்குள் வரவேண்டும் என்கிற உண்மையான அவாவுடன் தமிழகத்தின் அனைத்து சிந்தனைப் பள்ளிகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள்,அறிஞர்களை பள்ளிக்கல்வித்துறையின் கல்வி நடவடிக்கைகளில் இணைத்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஒருநாளும் ஓய்வெடுக்காமல்,ராப்பகலாகக் கல்விப்பணியில் தன்னைக் கரைத்துக்கொண்ட அவரை எடப்பாடி அரசு இன்று அவமானப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாணவர்களை தமிழகக்கல்வித்துறை வளர்த்தெடுக்கும் என்கிற முழக்கத்தோடு தன்னம்பிக்கையுடன் களத்தில் நிற்கும் ஒரு அதிகாரியை டம்மியாக்குவதற்காக புதிதாக ஒரு முதன்மைச் செயலர் பொறுப்பை உருவாக்கி,உத்தரவிட்டுள்ளார்கள்.

லஞ்சம் வாங்க ஒரு தடைகல்லாக அவர் இருந்தார் என்கிற ஒரு காரணத்துக்காக மட்டுமே அவரை பழிவாங்கியுள்ளது எடப்பாடி அரசு.

அரசுப்பள்ளி, தனியார் பள்ளி எந்தப்பள்ளியில் படித்தாலும் எல்லோரும் என் குழந்தைகள்தாம் என நிறைந்த மனதுடன் உணர்வுப் பூர்வமாக பணியாற்றியதற்கு நீங்கள் தரும் பரிசு இதுதானா?அடப்பாவிகளா…நீங்க நல்லாருப்பிகளா…நாசமாத்தான் போவீங்க…..என்று தமிழகத்தின் தெருக்களில் நின்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்வியில் அக்கறை கொண்ட நாங்கள் எல்லோரும் உங்கள் அரசுக்கு எதிராக மண்ணை வாரித்தூற்றுகிறோம்.கடுகி ஒழிக காசுக்கு அலையும் இவ்வரசு…

Leave A Reply

%d bloggers like this: