எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருக்கே
மக்கள் ஏன் இன்னைக்கு இவ்வளவு சந்தேஷமா இருக்காங்க?

500, 1000 த்தை பிடுங்கிட்டு நடுத்தெருவில் விட்டதனாலா?

அல்லது கூறியபடி புதிய வேலை வாய்ப்புகள் எதையும் உருவாக்க வக்கில்லாமல் 15 லட்சம் பேரின் வேலையை பறித்து நடுத்தெருவில் நிறுத்தியதாலா?

வேலை போனால் பரவாயில்லை சிறுதொழில் செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்றால் அதற்கும் ஜி.எஸ்.டி வரி போட்டு ஒழித்துக்கொண்டிருப்பதாலா?

அல்லது ஊருக்கே சோறுபோட்ட விவசாயிகள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டிருப்பதாலா?

இனி ஹோட்டலில் சாப்பிட முடியாது என்பதாலா?

அல்லது நான்காம் வகுப்புக்கு மேல் இனி ஆல் பாஸ் கிடையாது என்கிற சந்தோஷமா?

அப்படியே கல்லூரிக்கு போனாலும் டாக்டராக முடியாது என்கிற சந்தோஷமா?

அல்லது என்ஞ்சினியரிங்குக்கும் நீட் வரப்போகிறது என்கிற சந்தோஷமா?

ரேஷன் கடைகளை மூடப்போவதனாலா?

அல்லது பெட்ரோல், டீசல், காஸ் என்று அனைத்து மானியத்தையும் ரத்து செய்யப்போவதனால் வந்த கொண்டாட்டமா?

அரசுப்பள்ளிகளை இழுத்து மூடப்போவதனாலா?

அல்லது மேகேதட்டில் அணை கட்டி தமிழகம் பாலைவனமாக்கப்போவதை பார்க்கப்போகும் சந்தோஷமா?

இல்லை 2018 ஜனவரியில் பிறக்கப்போகும் புதிய இந்தியாவை நினைத்து சந்தோஷமா?

அல்லது தேசபக்தர்களால் சிறுபாண்மை, தலித் மக்கள் தினம் தினம் கொல்லப்படுவதால் வந்த களிப்பா?

இந்த பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை எல்லாம் குண்டாசில் கைது செய்வதாலா?

அல்லது அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான பாஜக மோடி காலை நக்கிக்கொண்டிருக்கும் எடப்பாடி பன்னீர் ஆட்சியில் வாழ்கிறோம் என்கிற பெருமையால் வந்த சந்தோஷமா?

உங்கள் கொண்டாட்டத்திற்கு என்னதான் காரணம்?

கோவணத்தை உருவிய பின்னும் கொண்டாட்டத்திற்கு குறைச்சல் இல்லை•

இனி உங்களிடமிருந்து உருவி எடுக்க வேண்டியது குடலை மட்டும் தான். அப்போதும் கொண்டாடுவீர்களா?

த்தூ😬😬😬

Leave A Reply

%d bloggers like this: