காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா மசூதிக்குள் வெள்ளியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளியன்று தொழுகை நடந்து கொண்டிருந்த போது, மசூதிக்குள் உள்ளே நுழைந்த தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து மேலும் இரு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காவலர்கள் 2 பேர் பலியானர். 14 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகின. இந்நிலையில் இந்த தாக்குதலில் மேலும் 26 பேர் பலியானதாகவும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: