நம்சாய்,
அருணாச்சல பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ பி மாநிலத்தை சேர்ந்தவர் நரேந்திரகுமார் சிங்.  இவர் அருணாசலப் பிரதேசம் நம்சாய் நகரில் வசித்து வருகிறார். இவர் அந்த நகரின் ஆர் எஸ் எஸ் பிரமுகர் ஆவார்.   நரேந்திரகுமார்  அதே நகரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அவருக்கு ஆதார் கார்ட் வாங்கித் தருவதாக வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  சென்ற இடத்தில் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.  மேலும் இந்த நிகழ்வை வெளியே சொல்லைக் கூடாது என கடுமையாக மிரட்டியுள்ளார்.  கடந்த 17ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு அதே சிறுமியை நரேந்திரகுமார் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளார்.   இது அந்த சிறுமி நடந்ததை வெளியே சொல்லி விடுவார் என்னும் அச்சத்தினாலோ இல்லை இன்னொரு முறை அவரை பலாத்காரம் செய்யவோ என சரியாகத் தெரியவில்லை.   கடத்திச் சென்ற அவரை ஒரு தனியான இடத்தில் அடைத்து வைக்க முற்பட்டபோது உள்ளூர் மக்களால் இது கண்டுபிடிக்கப்பட்டு அவர் போலீசில் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.
காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: