தில்லி,

2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.  இதனால் அரசுக்கு  1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு  தெரிவித்தது. இது தொடர்பாக  மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா,  திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.   6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் இறுதி வாதம் முடிவடைந்ததை அடுத்து , தீர்ப்பு குறித்த அறிவிப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று வெளியிட்டார். அதில், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்பு வழங்க கால அவகாசம் தேவைப்படுவதால் இந்தக் கால தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்

 

Leave A Reply

%d bloggers like this: