மாஸ்கோ,

ரஷ்யாவில் இன்று காலை கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து கடலில் கவிந்ததில் 18 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள டாமன் துறைமுகம் அருகே இன்று 40 கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். 16 பேர் மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: