சென்னை,

மருத்துவ படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்குகியது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்குகியது. எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி வரையிலும், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி வரையிலும்  நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சேர்க்கை ஆணை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்,  மருத்துவக் கலந்தாய்வில் 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பது உறுதியானது. அவர்கள் மீது முறைப்படி புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி இருப்பிட சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார்.

Leave A Reply