புதுதில்லி,
சாமியார் குல்மீத் ராம் ரஹீம் சிங் தனது ஆசிரமத்தில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப் மற்றும் அரியானாவில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு மாநிலங்களிலும் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி வன்முறையாளர்களை கலைத்து வருகின்றனர்.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை தனது ஆசிரமத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த 2002ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீதி மன்ற உத்தரவின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து இன்று 3 மணியளவில் தனது இருக்கைக்கு வந்த நீதிபதி இவ்வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்-கை குற்றவாளி என உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். 14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு வரும் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹிம் சிங்-கை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிய போலீசார் அவரை சிறைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து பஞ்ச்குலா நீதிமன்றத்தின் முன்  போராட்டத்தில் ஈடுபட்ட சாமியாரின் ஆதரவாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி  நடத்தியும் புகை குண்டுகளை வீசி நிலையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். மாலவுட் ரயில் நிலையம் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு சாமியாரின் ஆதரவாளர்கள் தீ வைத்துள்ளனர். ஊடக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திப்பட்டு வருகிறது.

குர்மீத் ராம் ரஹிம் சிங் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply