திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்ற கொலை சம்பவங்கள் மீது உடனடி நடவடிக்கைக் எடுக்க கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் கிராமத்தில் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு வீடுகளில் தனியாக இருந்த மருமகள் தில்ஷாத் (42)  மாமியார் அஷ்மத்பீ (85) ஆகிய இரண்டு  பெண்கள்  கொலை செய்யப்பட்டனர்.

அதேபோல்,  அதற்கு முன் வாரம்  காயம்பட்டு கூட்டுரோடு பகுதியில் தனியாக இருந்த ஷாகிதா (55)மற்றும் அவரது எட்டு வயது பேத்தி ரிஸ்வானா ஆகிய இருவரையும் நள்ளிரவில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த ஷாகிதா உயிரிழந்தார்.   இதனால் அப்பகுதியில் மூன்று கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ள  நிலையில் ஷாகிதாவின் உடல் சென்னை அரசு மருத்துவ மனையில் இருந்து  அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள்  மற்றும் அப்பகுதி மக்கள் சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர்,  திருவண்ணாமலை – பெங்களுரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையான பக்கிரிப்பாளையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருமணிநேரத்திற்க்கு மேலாக நீடித்த சாலைமறியலால்,  பேருந்துகள் செல்லமுடியாமல் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது   செங்கம் போலீசார் மற்றும் ஏ.டி.எஸ்.பி., ரங்கராஜன் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் நள்ளிரவு நேரத்தில்  செங்கம், திருவள்ளுவர் நகரில், கதிர் அகமத், 40, என்பவர் வீட்டின் முன், நிர்வாண நிலையில் சைக்கோ வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டதால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். தப்பி ஓடியவரைப் பிடிக்க, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இரவு முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply