தில்லி,

தில்லி புளூ லைன் மெட்ரோ ரயில் சேவைக்குட்பட்ட 50 ரயில் நிலையங்களில் இன்று முதல் இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன், புளூ லைன், எல்லோ லைன் ஆகிய சிறப்பு வழித்தடங்களின் வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் வைஷாலி பகுதியுடன் நொய்டா நகரை இணைக்கும் புளூ லைன் மெட்ரோ ரயில் சேவைக்குட்பட்ட 50 ரயில் நிலையங்களில் இன்று முதல் இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் ஏற்கனவே இலவச வைபை சேவை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: