புதுதில்லி

புதியதாக வெளியிடப்பட்ட ரூ. 200 நோட்டுக்கள் தற்போதைய அளவினால் ஏ டி எம் களில் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூ.50,ரூ. 200 நோட்டுக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  வங்கிகளில் மட்டும் தற்போது புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை ஏ டி எம் மூலம் பெற முடியாது எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மேம்பாட்டு பிரிவின் அதிகாரி காந்தி கூறுகையில், ”அனைத்து நாடுகளுக்குமே பல மதிப்பிலான கரன்சி நோட்டுக்கள் அவசியம் தேவை. நமது நாட்டில் ரூ. 200 நோட்டுக்கள் இதுவரை புழக்கத்தில் இல்லை. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பணப் புழக்கத்துக்கு இந்த ரூ 200 நோட்டுக்கள் பெரிதும் உதவும். இந்த புது நோட்டுக்களின் அளவு தற்போதுள்ள நோட்டுக்களின் அளவிலிருந்து மாறுபட்டிருப்பதால் அவைகள் தற்போது ஏ டி எம் களில் கிடைக்காது. வங்கியில் மட்டுமே கிடைக்கும்.

ஏ டி எம் இயந்திரத்தின் தட்டுக்கள் இந்த நோட்டுக்களின் அளவுக்கேற்ற செய்யப்பட்டு பொருத்தப்பட வேண்டும். அதற்குப் பிறகே ஏ டி எம் களில் இந்த ரூ.200 நோட்டுக்கள் கிடைக்கும். இந்த தட்டுகளை உருவாக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இவை தயாரானதும் விரைவில் பொருத்தப்படும். அதுவரை ஏ டி எம் களில் இந்த நோட்டுக்கள் கிடைக்காது.” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: