திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.  மாவட்டக் கல்வி அலுவலர் என்.சாம்பசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.

காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, மாதனூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை, திருப்பத் தூர் ஆகிய 10 ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆம்பூர் நகரப் பள்ளிகளின் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் என 165 பேர் கலந்து கொண்டனர்.

பேச்சுப் போட்டியில் திருப்பத்தூர் டி.எம்.எஸ். பள்ளி மாணவி எஸ்.ரீத்திகா, திருப்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.சந்தியா, எம்.கௌசல்யாஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.  கட்டுரைப் போட்டியில் கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பவித்ரா, திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் பள்ளி மாணவி எஸ்.சௌம்யா, பெரியகரம் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவன் பி.கோகுல்சக்தி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.  ஓவியப் போட்டியில் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஜி.சக்திவேல், மாதனூர் தாகூர் தேசிய பள்ளி மாணவர் எ.ராம்ராஜ், இலத்தேரி அரசு மகளிர் பள்ளி மாணவி எஸ்.பூஜிதா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

நிறைவு விழாவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 27 மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட அமைப்பாளர் செ.நா. ஜனார்த்தனன், தலைமையாசிரியர் கே. ஆசிப் இக்பால், அரிமா சங்கத் தலைவர்எஸ்.கணேசபாண்டியன், சி.குணசேகரன், உள்ளிட்டோர் வழங்கினர்.  முடிவில் மாவட்டப் பொருளாளர் எ.ஆனந்தன் நன்றி கூறினார்.

Leave A Reply