காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள  ஜே கே டயர்ஸ் தொழிற்சாலையில் சிஐடியு கொடியேற்றுவிழா,  சங்க பெயர்ப்பலகை திறப்புவிழா வியாழனன்று  (ஆக. 24) நடைபெற்றது.
இந்த ஆலையில் சங்க அங்கீகாரத்திற்கான  போராட்டத்தில் பணிநீக்க உத்தரவை எதிர்கொண்ட 27 தொழிலாளர்களின் அடையாளமாக 27அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் சிஐடியு கொடியை அதன் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்சிஐடியு தலைவர்கள் எஸ்.கண்ணன், இ.முத்துக்குமார், ரமேஷ், நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் பேசிய தலைவர்கள்,   ஜே.கே. டயர்ஸ் நிர்வாகம்  ஆத்திரப்படுகிறது. தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது. சுற்றறிக்கை மூலம்  நிர்வாகம் பகிரங்கமாக மிரட்டியது. தொழிற்சாலை நிர்வாகத்தின் தனது நிலையானை உத்தரவுகள் ஆலைக்குள் பணியாற்றும் தொழிலாளர்களை மட்டுமே கட்டுப்படுத்தும்.ஆலைக்கு வெளியே உள்ள  தொழிலாளி உள்ளிட்ட எந்த ஒரு தனி மனிதரின்  சுதந்திர செயல்பாட்டையும்  கட்டுப்படுத்த கம்பெனி நிலையாணைக்கு  அதிகாரமில்லை என்பதை  ஜே.கே. டயர் நிர்வாகம் உணர மறுக்கிறது. பெரும்பான்மை சங்கம் சிஐடியு என்று உணர்ந்தும் அதை ஏற்க  அவர்களின் மனம் மறுக்கிறது.

போலியான சங்கத்தின் மூலம் உருக்குகோட்டை போன்றுள்ள சிஐடியுவை உடைக்கப்பார்த்தார்கள். முடியவில்லை. சங்கப் பதிவை தடுக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. சங்கம்பதிவானது. வேலை நிறுத்தத்தைப் உடைக்க பார்த்தார்கள் நினைத்தவர்கள் உடைந்து போனார்கள். சூரிய உதயத்தையும் நிறுத்தமுடியாது, சங்கத்தின் உதயத்தையும் தடுக்கமுடியாது என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: