உயர்சிறப்பு இதய நோய் சிகிச்சை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவ முறைகள் பற்றிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

மாரடைப்பு, இதய செயலிழப்பு, ஆகியவற்றால் பாதிக்கப்படும் இதய நோயாளிகளின் ஆயுளை, காம்ப்ளக்ஸ் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மருத்துவம்  டோட்டல் ஆர்டிரியல்  சிகிச்சை ஆகியவற்றால் நீட்டிக்க முடியும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   பாரதிராஜா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் சென்னை பெருநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து  வந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கத்தின் தலைவரான முதுநிலை ஆலோசகர் மற்றும் இதய நோய் சிகிச்சை வல்லுநர் டாக்டர் என். சிவகடாட்சம், தற்போதைய சூழலில் இளம் வயதினர் இதய நோய்களுக்கு உள்ளாகும் நிலையில் விழிப்புணர்வு மிகவும் தேவைப்படுகிறது. இதய செயலிழப்பு நோயாளிகளுக்கான நவீன மருத்துவ முறைகள் பற்றியும் அவர்  சிறப்புரையாற்றினார். அமெரிக்காவிலிருந்து வருகை தந்த  இதய மருத்துவ  வல்லுநரான டாக்டர் விசுவநாத் நடேசன் பாதுகாப்பான முறையில் மிகவும் சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சையை மேற்கொள்வது  குறித்து விளக்கினார்.

பாரதிராஜா மருத்துவமனையின் இதய நோய் அறுவை மருத்துவ வல்லுநர் வி. ராஜேஷ் பேசுகையில் காலில் இருந்து சிரை  எடுக்கும் வழக்கமான முறைக்கு  முழு தமனி சீரமைப்பு சிகிச்சையால்  இதய நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்பதற்கான சான்றுகளை முன்வைத்து உரையாற்றினார். முதுநிலை மருத்துவ ஆலோசகர் மற்றும் இதய நோய் சிகிச்சை வல்லுநரான டாக்டர் சி. ஆறுமுகம் உள்பட பலரும் பேசினர்.

Leave A Reply