லக்னோ;
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கப்படாததால் 71 குழந்தைகள் பலியாயின.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 67 லட்சம் வரை பாக்கி வைத்ததும், இதன் காரணமாக அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு விநியோகிக்க மறுத்து விட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதனிடையே, உத்தரபிரதேச மாநில தலைமை செயலர் தலைமையிலும் ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இக்குழு மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களது உறவினர்கள், அதிகாரிகள் உட்பட பலதரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தியது.

பின்னர் தனது விசாரணை அறிக்கையை  முதல்வர் ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்தது.
அதில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் அலட்சியமாக இருந்ததே குழந்தைகளின் உயிரிழப்புக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதனால், சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமை செயலர் (மருத்துவக் கல்வி) அனிதா பட்நாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அடுத்ததாக தற்போது, மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, இவருடைய மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் ‘புஷ்பா சேல்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: