சண்டிகர்,

கலவரத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடு செய்வதற்காக கும்ரீத் ராம் ரஹிம்சிங் சொத்துகளை முடக்க அரியானா மற்றும் பஞ்சாப் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆதரவு சாமியார்  கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், ராம் ரஹிம் குற்றவாளி என அரியானா மாநில சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் கொந்தளித்த அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப், அரியானா, தில்லி ஆகிய மாநிலங்களில் கடும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். பஞ்சாப்பில் ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் சிரிஸா-வில் பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் காவல்துறை, ஊடக வாகனங்களைத் தீவைத்து எரித்தனர். போலீஸ் நிலையம் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தில்லியில் அனந்த் விகார் ரயில் நிலையத்திலும் , இரண்டு பேருந்துகளும் தீ வைக்கபப்ட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலவரம் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் 6000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலவரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடு செய்வதற்காக கும்ரீத் ராம் ரஹிம்சிங் சொத்துகளை முடக்க அரியானா மற்றும் பஞ்சாப் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: