போபால்,

மத்தியப் பிரதேசத்தில் அரசு பள்ளியின் முன்பாக குவிந்துள்ள குப்பையில் இருந்து வெளியேறிய துர்நாற்றம் காரணமாக மாணவர்கள் வலுக்கட்டாயமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் டிடி நகர் பகுதியில் சந்திர சேகர் அசாத் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முன்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குப்பை கொட்டி வருவதால் இப்பள்ளி மிகப் பெரிய குப்பை கிடங்காக மாறியுள்ளது. மேலும் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்குள் செல்லும் பொழுது முகமூடி அணிந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர்கள், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், அதிகாரிகள் இது வரை  எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் குப்பையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக மாணவர்களின் உடல் நலன் கருதி வியாழனன்று 22 மாணவர்கள் பள்ளியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: