சேலம்,

சேலத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் காவிரியாற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அடுத்த சிம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (17), அவ்வை சண்முக ராஜன் (19) ஆகிய இருவரும் இன்று நண்பர்களுடன் காவிரியாற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாத இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply