திராவிடர் கழகம் சார்பில் சனிக்கிழமையன்று (ஆக 25) மாநில  அதிகார மீட்பு மாநாடு சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமை தாங்கினார். திராவிடர் கழக நிர்வாகியான வீ.குமரேசன் வரவேற்றார்.

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை உரையாற்றுகையில், மாநில உரிமைகள் பற்றி  அண்ணா சட்டமன்றம்,  நாடாளுமன்றம்  உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குரல் கொடுத்திருக்கிறார். இதைத் தவிர்த்து அவர் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு  ஒன்றையும் நடத்தியுள்ளார்.  மத்திய மற்றும் மாநில அரசின் உரிமைகள் எப்படி இருக்கும் வேண்டும் என்பதை ஆராய நீதிபதி ராஜ மன்னார் தலைமையில் அப்போதையை முதலமைச்சர் அண்ணா ஒரு குழு அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை மாநில அரசின் உரிமைகள் தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை  என்ற பெயரில் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. இதன் பிறகு வந்த எம்.ஜிஆரும் சர்காரியா கமிஷனை மூலம் மாநில உரிமைள் தொடர்பான சில கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை சேர்த்து மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

கல்வித்துறையில் தலையீடு
‘கல்வித்துறையில் தலையீடு பண்பாட்டுத்துறையில் தலையீடு’ என்ற தலைப்பில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு  பேசுகையில் உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக நீட் தொடர்பான வழக்கு வந்த போது இரு பாடத்திட்ட மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒரு திட்டத்தை தாயரித்து கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுக்கு  நீதிமன்றம் சொன்னது. அடுத்த முறை வழக்கு  விசாரணைக்கு  வந்த போது மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விலக்கு இல்லை என்றும் கூறியவுடன் நீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இது இந்தியாவின் அரசில் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. காமராசர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எழைய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பற்காக 5 மருத்துவக் கல்லூரிகளை துவங்கினார். அந்த கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீடு என்று 15 விழுக்காடு இடங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. அந்த இடங்களை மற்ற மாநில ஏழை மாணவர்களுக்கு கொடுக்காமல் வெளிநாட்டு மாணவர்களுக்கு மோடி அரசு தாரை வார்க்கிறது என்றும் அவர் கூறினார்.இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெளிநாட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில உரிமையில் கல்வியில் தலையீடு என்பது பண்பாட்டில் தலையிடுவதாக பார்க்கவேண்டும் என்றார் பிரின்ஸ்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசுகையில், மோடி ஆட்சியில் ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளட்டவை  சிதைக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி  மாநில உரிமைகள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மொத்த அதிகாரத்தையும் பறித்துள்ளது. நாட்டின் வரி நிர்வாகத்தை இந்த  பொதுத்துறை வங்கிகள் தான் நிர்வகிக்கும்.  ஜிஎஸ்டிஎன் அமலுக்குவந்த பிறகு அதன் நிர்வாகம் அனைத்தும்  தனியார் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
 

பசு, சிசு இரண்டையும் காப்பற்ற முடியவில்லை.
உணவு உரிமையிலும் மூக்கு நுழைப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழக மூத்த தலைவர்களில் ஒருவரான  அருள்மொழி பேசுகையில், மனிதனை கூட்டமாக அடித்துக்கொல்கிறார்கள். மறுபுறம் மாட்டைப் பாதுகாப்பது தான் முக்கியம் என்கிறார்கள். மோடிக்கு அடுத்த நிலையில் உளள யோகி ஆதித்யநாத் உடல்நலக் குறைபாட்டால்தான் கோரக்பூரில்  70 குழந்தைகள் இறந்தனர் என்று கூறுகிறார். அதற்கு அடுத்தவாரம் கோசாலையில் 200 மாடுகள் இறந்தன. ஆக இவர்களால் பசுவைக் காப்பற்ற முடியவில்லை சிசுவையும் காப்பற்ற முடியவில்லை என்றார்.
காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு என்ற தலைப்பில் அ. மார்க்ஸ்  ‘தமிழர் வரலாறு இருட்டடிப்பு’ என்ற தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவன், “மொழி உரிமை பறிப்பு’’ என்ற தலைப்பில் முனைவர்  ராமசாமி ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியை பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: