அங்காரா;
துருக்கியின் ஜனாதிபதியாக ரிசெப் தய்யிப் எர்டோகன் இருக்கும் வரையில் ஐரோப்பிய யூனியனில் அந்நாட்டுக்கு இடமில்லை என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

பல முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அவற்றில் பொறுப்பாக எர்டோகன் நடந்து கொள்ளவில்லை என்று ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியேல் கூறியிருக்கிறார்.

இது பற்றி மேலும் கூறிய அவர், “இப்போதுள்ள நிலையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஐரோப்பிய யூனியனில் ஒருபோதும் துருக்கியால் உறுப்பினராக ஆக முடியாது. துருக்கி வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் எந்தெந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கிறதோ, அவற்றிலிருந்து துருக்கி விலகிச் சென்று விட்டது” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: