பிள்ளையார் எனக்குப் பிடித்தமானவர். ஏனைய தெய்வங்களிடம் இல்லாத ஒரு சினேக பாவம் அவரிடம் உண்டு – ஒரு சகோதரன் மாதிரி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் என்னுடைய இஷ்ட தெய்வங்களில் ஒருவர்.
பிள்ளையார் சதுர்த்தி என்பது என்னளவில் பூரணம் கொழுக்கட்டையுடனும் சுண்டலுடனும் சம்பந்தப்பட்டது. இன்றைக்குத் தெருவுக்குத் தெரு பிரமாண்டமான வடிவங்களில் நிறுத்தப்பட்டிருக்கும், நாளை கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு நீர்நிலைகளில் விடப்படவிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளைப் பார்க்கும்போது வேதனையே ஏற்படுகிறது.
அரசியல் நோக்கத்துடன், மதவெறிக்கு வித்திடும் வகையில், சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் ஒரு காரியத்துக்குத் தான் பயன்படுத்தப்படுவதை இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பிள்ளையார் சகித்துக்கொண்டிருக்கப்போகிறார் என்று தெரியவில்லை!
  • சமஸ் Samas

Leave A Reply

%d bloggers like this: