இந்திய-ரஷ்ய நாடுகளின் நட்புறவு வரலாற்றில் 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில், ஒரு ஓவியக் கண்காட்சி  சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ஆக.25அன்று (வெள்ளி)  தொடங்கியது.

இந்த மையத்துடன் இணைந்து, ரஷ்ய அரசு அணு ஆற்றல் கழகம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி செப்டம்பர் 1 ஆம் தேதிவரை நடைபெறும். ‘நட்பின் ஆற்றல் – தூரிகையின் தூறல்கள்’  என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இக்கண்காட்சியில், சென்னை மற்றும் டெல்லியைச் சேர்ந்த 10 ஓவியக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. நட்பின் இணக்க ஆற்றலையும், பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் வண்ணங்களில் இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 23 முதல் 25 வரை இதே அரங்கில் நடைபெற்ற ஓவிய முகாமில் இந்தப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. ஓவியக் கலைஞர் அக்ஷத் சின்ஹா  தலைமையில் நடத்தப்படும் இக்கண்காட்சியில், அவர் உட்பட மொத்தம் 10 ஓவியர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
“நம் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. அணுமின் ஆற்றலும், கலாச்சாரமும் ஒத்த குணமுடையவை அல்ல என்று ஒருவர் முதல் பார்வையில் சொல்லக்கூடும். இருப்பினும், பல ஆண்டுகளாக அணுமின் ஆற்றலும்,கலாச்சாரமும் நம் இரண்டு நாடுகளையும் இணைக்கக்கூடியதாக உள்ளது” என்று ரொசாட்டம் நிறுவனத்தின் தெற்காசிய மண்டல துணைத் தலைவர் அலெக்சி பிமினவ் தெரிவித்தார்.

தென்னிந்தியாவின் ரஷ்ய துணைத் தூதர் மற்றும் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குநரான திரு. மிக்கேல் கோர்பாத்தோவ் சென்னையைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியக் கலைஞர்களான பத்மநாபன், கிருஷ்ணன், சிறீஹரி, சங்கவி, நரேன் நோ, வித்யா சுந்தர், பிரவிண் கிரிஸ்பக், சுமிதா சுந்தரம், முருகேசன் ஆகிய 9 கலைஞர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: