காபூல்,

காபூலில் உள்ள மசூதி ஒன்றில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மசூதியில் இன்று மதியம் 1 மணியளவில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினார். இதை தொடர்ந்து துப்பாக்கியுடன் மசூதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காவலர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில்தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்தனர்.

Leave A Reply