நாகப்பட்டினம், ஆக.24- தேனி மாவட்டம், கம்பத்தில் ஆகஸ்ட் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29 ஆவது மாநில மாநாட்டை நோக்கி, வெண்மணி தியாக பூமியிலிருந்து தியாகிகள் சுடர் பயணம் வியாழக்கிழமையன்று எழுச்சியோடு புறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்கமாவட்டப் பொருளாளர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். வெண்மணி தியாகிகள் ஸ்தூபியிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகைமாலி ஆகியோர் தியாகிகள் சுடரை எடுத்துப் பயணக்குழுத் தலைவரும் விவசாயிகள் சங்க மாநிலத் துணைச்செயலாளருமான ஜி.சுந்தரமூர்த்தியிடம் வழங்கினர்.

சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர், விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கோபாலன், எல்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பயணக் குழுவை வாழ்த்திப் பேசினர். நாகை மாலி சிறப்புரையாற்றினார். ஏ.வி.முருகையன் நிறைவுரையாற்றினார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் நன்றி கூறினார். இந்தச் சுடர்ப் பயணக் குழு உறுப்பினர்களாக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன், கடலூர் மாவட்டத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன், நாகை மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சிவகங்கை கே.வீரபாண்டி, புதுக்கோட்டை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பீமராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுடர்ப் பயணக் குழுவிற்கு, தேவூர், கீழ்வேளூர் ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave A Reply