லண்டன், அக்.24-
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிரபல பவுண்ட்லேண்ட் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகியிருக்கிறது.
லண்டனின் சிங்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள பவுண்ட்லேண்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 100 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீ உக்கிரத்துடன் பிடித்து எரிந்து வரும் நிலையில் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தை தொடர்ந்து அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: