புதுதில்லி, ஆகஸ்ட் – 24

மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜுனைத்தின் பெற்றோர், ஜலாலுதீன் மற்றும் சைரா ஆகியோரிடம் தலா ஐந்து லட்சம் ரூபாய்க்கான இரு காசோலைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் புதன் அன்று  வழங்கினார். ஜுனைத்தின் இல்லம் உள்ள கட்டாவாலியில் இக்காசோலைகள் வழங்கப்பட்டன.

சென்றமாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தில்லி வந்திருந்தபோது ஜுனைத்தின் பெற்றோரை சென்று சந்தித்தார். அப்போது அவர் கேரள மக்களிடம் நிதி வசூல் செய்து அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி இந்த நிதி இன்று அவர்களிடம் அளிக்கப்பட்டது. அப்போது ஜுனைத்தின் தாயார் சைரா, பினராயி விஜயனிடம் தாங்கள்  அளிக்கம் நிதியை வைத்து ஜுனைத்தின் பெயரால் பெண்களுக்கான பள்ளிக்கூடம் திறக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிருந்தா காரத், துன்பத்திலும் துயரத்திலும் வாடும் மக்களுக்கு இத்தொகை ஓர் அடையாளம்தான் என்றும் மதவெறியை எதிர்த்து முறியடித்திடும் போராட்டத்தில் கட்சி உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜுனைத் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அறுவரில் நால்வர் பிணையில் விடப்பட்டிருப்பதனை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Leave A Reply

%d bloggers like this: