பொள்ளாச்சி, ஆக. 24 – நீட் தேர்வை கண்டித்து பொள்ளாச்சியில் அனைத்து கட்சி மற்றும் சமூக கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில கழக வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், கிளைச் செயலாளர் கே.ரவி மற்றும் திமுக நகர செயலாளர் தென்றல் செல்வராஜ், கல்வி உரிமைக்கான கூட்டமைப் பின் நிர்வாகி நா.கண்ணுசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு, திராவிட கழகத்தின் தி.பரமசிவம், சிஐடியு நிர்வாகி சேதுராமன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் திருமலைசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆர்.எம்.அருள், மதிமுக குகன்மில் செந்தில், தமுமுக கபூர், மமக ஷேக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

இதில் தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவுகளை சிதைக்கின்ற செயலை செய்து வருகின்ற மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: