பிரசிலியா,
பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள பார் மாநிலத்தில் 70 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்றின் நடுவே சென்ற போது திடீரென படகில் பழுது ஏற்பட்டு விபத்துக்குள்ளாது. இதில் படகில் இருந்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் தத்தளித்த பயணிகளில் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படகு விபத்துக்கான காரணம் குறித்தும் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: