புதுதில்லி, ஆக. 24 – நகர எல்லைக்குள் மதுபானக் கடைகளுக்கு தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் செயல்படும் அனைத்து மதுக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் மூட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 500 மீட்டர் தொலைவில் செயல்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளும், ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கி வந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள மது விற்பனைத் தடையானது நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. சண்டிகரை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில், அந்த தொண்டு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மதுவிற்பனை தடை தொடர்பான விளக்கத்தையும் உச்சநீதிமன்றம் அளித் துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளைஅகற்றுமாறுதான் உத்தரவிடப்பட்டு ள்ளது என்றும், நகராட்சி எல்லைக்குஉட்பட்ட உரிமம் பெற்ற மதுக்கடை களை மூடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: