புதுதில்லி,
தமிழகத்தில் தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டம் தோப்பூர். புதுக்கோட்டை , காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பது இதுவரை உறுதி செய்யாத இருந்த நிலையில் தற்போது தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply