மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியின் காரணமாக 11 மாநிலங்களுக்கு ரூ 950 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

ஜிஎஸ்டி-ல் வாட், மத்திய விற்பனை வரி, சொகுசு வரி, ஆடம்பர வரி, நுழைவு வரி (அனைத்து வடிவங்கள்), பொழுதுபோக்கு வரி, விளம்பர வரி, லாட்டரி வரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் மீதான வரி, மாநில செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள், சேவை வரி போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி-ல் இணைக்கப்படாத வரிகள் வருமானம், சொத்து மற்றும் மூலதன பரிமாற்றங்கள், பெட்ரோலியம் பொருட்கள், மாநில சுங்கவரி மற்றும் மின்சாரக் கட்டணம் மீதான வரிகள் ஜிஎஸ்டி-ல் இணைக்கப்படவில்லை. இதனை எப்போதும் போல மாநில அரசு பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது இருக்கிறது.
இந்நிலையில் தற்போதுள்ள வரி விதிப்பு முறையின் படி, இந்தியாவில் மொத்த மாநிலங்களின் வருவாய் 2016 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017 நிதி ஆண்டில் 16.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கூட்டு ஆண்டு வளர்ச்சி விகித கணக்கீட்டின் மூலம் தெரிய வந்திருக்கிறது.. இந்நிலையில் தங்களுக்கு ஏற்கனவே வந்த வருவாய் விகிதம் தற்போது ஜிஎஸ்டியின் அமலாக்கத்தின் மூலம் கடுமையாக குறைந்திருக்கிறது. இந்த இழப்பை மத்திய அரசே ஈடுசெய்ய வேண்டும் என்று 11 மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. குறிப்பாக பெரிய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹிமாச்சல், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் 5,600 கோடி வருவாய் இழப்பு நேர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் கோவா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ 3,900 கோடி இழப்பீடு வேண்டும் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கு 15.5 சதவீதம் வருவாய் இழப்பு நேர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2018 நிதி ஆண்டு முடிவில் ரூ 9,500 கோடி வரை இழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை வரி மீதான 10 சதவீத உள்ளீட்டு வரி மூலம் 5 சதவீத செயல்திறன் லாபத்தை நாம் இணைத்தால் தமிழ்நாடு, சத்தீஷ்கர், குஜராத், ஒரிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் 3,700 கோடி ரூபாயினை 2018 நிதி ஆண்டில் இழப்பீடாக மத்திய அரசு அளிக்க வேண்டி வரும்.

Leave A Reply