ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 2.28 மணியளவில் ஏற்பட்ட நில நிலநடுக்கத்தால் வீடுகள் லேசான குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து கடும் குளிரையும் பொருட்படுத்ததாது வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

Leave A Reply