பொன்னேரி அருகில் உள்ள ஜெயம் கால்வனைசிங் தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆக.23 அன்று சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.பூபாலன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட துணைத் தலைவர்கள் என். நித்தியானந்தம், இ.ஜெயவேல், கிளை நிர்வாகிகள் ஏ.அகப்பிரியன், எம்.கண்ணன், பி.ஜெகன் உட்பட பலர் பேசினர்.
படம் சிஐடியு

Leave A Reply

%d bloggers like this: