வாஷிங்டன், ஆக.24- உலகின் மிகப்பெரிய மளிகைக் கடையான வால்மார்ட், கூகுள் நிறுவனத்துடன் ஆகஸ்ட் 22 அன்று ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இனி கூகுள் வலைத்தளத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.  485 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் வால்மார்ட் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகும். 28 நாடுகளில் 11,695 கடைகளைக்கொண்ட வால்மார்ட் 2.3 மில்லியன் ஊழியர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய தனியார் வேலை அளிப்பவராகவும் உள்ளது. இவ்வளவு இருந்தாலும், இணையவழி விற்பனையில் தாமதமாக வால்மார்ட் நுழைந்தது என்பது,வருவாயில் அமேசான் முந்துவதற்கு வழிவகுத்துவிட்டது.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் என்பதுபோல, இணைய உலகின் சக்ரவர்த்தியாகத் திகழும் கூகுளுடன் வால்மார்ட் கைகோர்த்துள்ளது. மற்ற தளங்களைப்போல அன்றி, கூகுள் அசிஸ்டண்ட் உதவியுடன், வாய்மொழியாகவே பொருட்களை வாங்கும் வசதி செய்துதர இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் சிரமப்பட்ட வால்மார்ட், விரைவில் இந்தியச் சந்தையிலும் இணையவழியாக நுழையும் என்று எதிர்பார்க்கலாம்.

-அறிவுக்கடல், (நன்றி : எகனாமிக் டைம்ஸ்)

Leave A Reply

%d bloggers like this: